ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் நிகழ்வு வருகிற 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் வெளியான சிறந்த தொடர்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அதன் பட்டியல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி 2009ம் ஆண்டில் சிறந்த தொடர்களாக 'திருமதி செல்வம்' முதலிடத்தையும், 'வசந்தம்' தொடர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 2010ம் ஆண்டுக்கான சிறந்த தொடர்களுக்கான விருது பட்டியலில் 'உறவுக்கு கை கொடுப்போம்' தொடரும், இரண்டாவது இடத்தை 'தென்றல்' தொடரும் பெறுகிறது.
2011ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் 'சாந்தி நிலையம்' தொடரும், 2வது இடத்தை 'நாதஸ்வரம்' தொடரும் பெறுகிறது. அதேபோல் 2012ம் ஆண்டிற்கான சிறந்த சீரியல்களாக 'இருமலர்கள்' மற்றும் 'உதிரிப்பூக்கள்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் சிறந்த சீரியல்களுக்கான முதல் பரிசை 'வாணி ராணி' சீரியலும், இரண்டாவது பரிசை 'தெய்வமகள்' தொடரும் பெற்றுள்ளது.