'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஜீ தமிழ் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 அன்று உற்சாகமூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்வையாளர்களுக்காக அனுபவத்தை தர உள்ளது,
காலை 8.30 மணிக்கு : கலைமாமணி சுகி சிவம் நடத்தும் 'விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்' மூலம் காலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. " இன்றைய குழந்தை வளர்ப்பு சரியா! தவறா! " என்ற தலைப்பில் பேச உள்ளனர். காலை 10:30 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து, வரவேற்பை பெற்ற ‛வீட்ல விஷேஷம்' படம் ஒளிபரப்பாகிறது.
மதியம் 1 மணிக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சியான 'எங்க வீட்டு மஹாலக்ஷ்மி', ஜீ தமிழ் முன்னணி நடிகைகள் அவர்களின் அம்மாக்களுடன் பார்வையாளர்களுக்கு வேடிக்கையான மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களை ஒன்றாக வழங்குகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு அஜித்தின் ஆக்ஷன், த்ரில்லர் படமான வலிமை படம் ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு இந்தாண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமான கேஜிஎப் 2 மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பல மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டிய இப்படத்தில் யஷ் நாயகனாக நடிக்க சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை காலை 8.30 மணி முதல் ஜீ தமிழில் கண்டு களியுங்கள்.