ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் தனது 6வது சீசனை தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியல் சேனல் நிர்வாகம் அமைக்கும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களே கலந்து கொண்டு வந்தனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேனல் குழு தேர்வு செய்யும் குழுவுடன் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான புரமோவை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய சுய குறிப்போடு கூடிய ஒரு காணொளி காட்சியை பதிவு செய்து அதனை vijay.startv.com என்ற தளத்திற்கு சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப ஆர்வமாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. 6வது சீசனில் 3 பேர் பொதுமக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.