ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை காஜல் பசுபதி சின்னத்திரை விஜேவாக என்ட்ரி கொடுத்து பின் சீரியல் சினிமா என படிப்படியாக வளர்ந்தார். சிலகாலம் திரைத்துறையை விட்டு விலகியிருந்த காஜல், தற்போது சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது உடல் எடையையும் குறைத்து அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல கெட்டப் போட்டும் கவனம் ஈர்த்து வந்தார். இருப்பினும் தனக்கு வாய்ப்பு சரியாக கிடைப்பதில்லை என பல நேர்காணல்களிலும், பதிவுகளிலும் குமுறிக்கொண்டிருந்த காஜலுக்கு சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' என்கிற தொடரில் கண்டிப்பான போலீஸாக எஸ்.ஜ. காவேரி என்கிற கதாபாத்திரத்தில் காஜல் நடிக்க உள்ளார். வில்லி மற்றும் நெகடிவ் ரோல்களில் ஒரு காலத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான காஜலுக்கு தற்போது மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி திரையுலகில் தனது இருப்பை காஜல் பசுபதி தக்கவைத்துக் கொள்வரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.