ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடர் 'கனா காணும் காலங்கள்'. இதில் நடித்த இர்பானும் பலருக்கும் பேவரைட்டான நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பு, டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என ஆக்டிவாக இருந்த இர்பான் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார். அவர் நடிப்பில் 'சுண்டாட்டம்' திரைப்படம் ஓரளவு விமர்சன ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இருப்பினும் மற்ற படங்கள் ஹிட்டாகவில்லை. அதன்பிறகு இர்பான் சினிமாவில் ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டாகவில்லை. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் 'கனா காணும் காலங்கள்' வெப் தொடரில் தான் நடித்து வந்தார்.
இந்நிலையில், இர்பான் தற்போது தனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இர்பான் தற்போது 'உண்மை சொன்னால் நேசிப்பாயா' என்ற பெயரில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சம்யுதா நடிக்கிறார். இதற்கான போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்துள்ளனர். யூ-டியூபை தளமாக கொண்டு குறும்படம் மற்றும் வலைத்தொடர்களை வெளியிட்டு வரும் குட்டி ஸ்டோரி நிறுவனம் இந்த ப்ராஜெக்டை தயாரிக்கிறது. எனவே, இர்பான் கமிட்டாகியிருப்பது குறும்படமா? வலைத்தொடரா? அல்லது திரைப்படமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.