அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகை பாவ்னி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் சில காலங்கள் மீடியாவில் வராமல் இருந்தார். அதன்பின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள்-2வில் அமீருடன் சேர்ந்து நடனமாடி வருகிறார்.
அமீர், பாவ்னி ரெட்டிக்கு புரொபோஸ் செய்த விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். ஆனால், அதைபற்றியெல்லாம் தெளிவாக விளக்கம் சொல்லாமல் இருவரும் சமாளித்தே வந்தனர். இந்நிலையில், பாவ்னி ரெட்டி கேண்டில் லைட் டின்னரில் ரொமாண்டிக்கான போட்டோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தான் காதலை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். பாவ்னி ரெட்டி காதலில் விழுந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் தொகுப்பாளினி பிரியங்காவும் அந்த பதிவில் உண்மை என்று கமெண்ட் அடித்துள்ளார்.
கடந்த வார பிக்பாஸ் ஜோடிகள்-2 எபிசோடில் பேசிய பாவ்னி ரெட்டி, தனக்கு அமீரை பிடிக்கும் என்றும், அவர் காதலை ஏற்க தனக்கு டைம் வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு இலைமறை காயாக சில உண்மைகளை ரசிகர்களிடம் யூகிக்க வைத்துள்ளது.