வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது.
தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், வானொலி தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சினிமா இயக்குனர்கள் கார்த்திகை செல்வன், த.செ.ஞானவேல், ஆர்ஜே.பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.