நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தன் வாழ்வின் இரண்டாவது இன்னிங்சை ஸ்டார்ட் செய்துள்ளார். அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் துணிக்கடை ஒன்றை ஆரம்பித்து பிசினஸிலும் பிசியாகிவிட்ட வனிதா தற்போது மீண்டும் புதிய தொழில் ஒன்றை தொடங்கவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பேஷன் வாக்கில், வனிதா தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் கெத்தாக மாடல் போல் நடை போட்டுள்ளார். பேஷன் டிசைனராகவும் பணியாற்ற ஆரம்பித்துள்ள அவர் தன்னுடைய புது பிசினஸ் குறித்து அந்நிகழ்வில் அறிவித்தார். மேலும், மிக விரைவில் தன்னுடைய புது பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை சேட்டைகளை எல்லாம் விட்டு சமத்து பெண்ணாக வலம் வரும் வனிதாவை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். அவரது புதிய பிசினஸூக்காக வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.