2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
பிரபல சீரியல் நடிகர் நவீன் குமாருக்கும், செய்திவாசிப்பாளர் கண்மணி சேகருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சோஷியல் மீடியாவில் இருவருக்குமே அதிக பாலோயர்கள் இருப்பதால் இவர்கள் வெளியிடும் அப்டேட்டுகள் விரைவிலேயே வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ள நவீன் குமார் அங்கே காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை நவீன் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு 'எப்போது திருமணம். சீக்கிரம் அடுத்த அப்டேட் விடுங்க' என கேட்டு வருகின்றனர்.
நவீன் குமார் கலர்ஸ் டிவியின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். நவீன்குமார் அதில் நடிக்கும் சக நடிகையான ஹீமா பிந்துவை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் நவீன் கண்மணியுடனான காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.