ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் நடிக்கவிருக்கும் 66வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். பட பூஜை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட விஜய் - ராஷ்மிகா புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலும், ராஷ்மிகா விஜய்யை திருஷ்டி கழிப்பது போலவும், நெருக்கமாக நின்று கொண்டிருப்பது போலவும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பல ரசிகர்களிடம் குஷியை ஏற்படுத்தியிருந்தாலும், விஜய்யின் ரசிகைகள் மத்தியில் பயங்கர பொறாமையை கிளப்பி விட்டுள்ளது. அதில் மிகவும் கடுப்பான காஜல் பசுபதி, ராஷ்மிகா விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'தள்ளி நில்றி' என குறிப்பிட்டுள்ளார். காஜல் பசுபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது பலரும் அறிந்ததே. ஒரு ரசிகையாக அவர் தனது பொறாமையை நகைச்சுவையாக தான் பதிவிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். ஆனால், ராஷ்மிகாவின் ரசிகர்களோ காஜலின் பதிவை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் மீது கோபத்தில் உள்ளனர்.