ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரை நடிகை சமீரா ஷெரீப் புதிதாக வெளியிட்டுள்ள 'உள்ளே வெளியே' ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீரா கர்ப்பமாக இருந்த போது வயிற்றுக்குள் இருந்த குழந்தையுடன் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். அன்றைய நாளில் அவரது அந்த வீடியோவை பலரும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், நெகடிவ் கருத்துகளை சமீரா எப்போதும் கண்டு கொண்டதில்லை. இதற்கிடையில், அவரது பிரசவமும் நல்லபடியாக முடிந்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில், தான் ஆடிய ரீல்ஸ் வீடியோக்களை ரீ-கிரியேட் செய்து வரும் சமீரா தற்போது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அதே பாடலுக்கு அதே நடன அசைவுகளை துல்லியமாக ஆடியுள்ளார். இந்த இரண்டு வீடியோக்களையும் அருகே அருகே வைத்து ‛பேபி இன் & பேபி அவுட்' என்ற கேப்ஷனுடன் போஸ்ட் செய்துள்ளார். சமீராவின் இந்த டான்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் அவர் ரி-கிரியேட் செய்ய வேண்டிய ரீல்ஸ் வீடியோக்களை பட்டியல் போட்டு கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.




