‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஜய் டிவியில் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களை பெருமைப்படுத்தும் விஜய் விருது நிகழ்ச்சி கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, விஜய் டிவியில் நடித்து வரும் சீரியல் நடிகர், நடிகைகள், ரியாலிட்டி ஷோ கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கவரவிக்கும் வகையில், விஜய் டிவி டெலிவிஷன் விருது நிகழ்ச்சியையும் தனியாக நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டிவி வெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியும் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதில், விஜய் டிவிக்காக பல முறை டிஆர்பியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த பாரதி கண்ணம்மா தொடருக்கு தான் சிறந்த தொடருக்கான விருது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இம்முறை சிறந்த தொடருக்கான விருதை 'பாக்கியலெட்சுமி' தொடர் தட்டிச் சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் முக்கியமான பிரிவுகளில் பாரதி கண்ணம்மாவிற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. சிறந்த அறிமுக நடிகை (வினுஷா தேவி), சிறந்த குழந்தை நட்சத்திரம் (லிஷா மற்றும் ரக்ஷாவுக்கு) ஆகிய பிரிவுகளில் மட்டுமே விருது கிடைத்துள்ளது.
அதேசமயம், பாக்கியலெட்சுமி தொடருக்கு சிறந்த ப்ரைம் டைம் தொடர், சிறந்த வில்லன் (கோபி), சிறந்த நடிகை (சுசித்ரா), சிறந்த துணை நடிகை (ரேஷ்மா பசுபலேட்டி), சிறந்த அப்பா (ரோசரி), சிறந்த எழுத்தாளர் (பிரியா தம்பி) ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.




