ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான வீஜே தீபிகா, விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். சரவண விக்ரம் - தீபிகா ஆகிய இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக செட் ஆனதால், இந்த ஜோடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தீபிகாவுக்கு முகப்பரு பிரச்னை இருந்ததால் அவர் பாதியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு சீரியல்களில் தீபிகாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை சரியாகி விடவே குறும்படங்கள், போட்டோஷூட் என பிசியாக இருந்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சித்திரம் பேசுதடி' சீரியலில் வீஜே தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் கம்பேக் தரவுள்ளார். தீபிகாவின் என்ட்ரியால் கதையில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெகடிவ் ஷேடில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்த தீபிகா தற்போது வில்லியாகவே என்ட்ரி கொடுப்பதால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த தொடரில் வீஜே தீபிகா நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சித்திரம் பேசுதடி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.