ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் குஷ்பு. கடைசியாக லஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் டிவிக்காக 'மீரா: ஒரு புதுக்கவிதை' என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் பணியாற்றுகிறார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குஷ்புவுடன் சுரேஷ் சந்திர மேனன், பூஜா லோகேஷ், ஈஸ்வர் ரகுநாதன், அரவிந்த் கதிர், அண்ணபூரணி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஜவஹர் இயக்குகிறார், அவ்னி டெலிமீடியா சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். குடும்ப வன்முறைகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் குடும்ப பெண்ணின் கதை.