அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சினிமா நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற இருமகள்கள் உள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான குஷ்பு, தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் பயணம் செய்து வருகிறார். இதனையொட்டி சிலர், அவர் திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறிவிட்டதாக குற்றம் சுமத்தி வந்தனர். சமீபகாலங்களில் சோஷியல் மீடியாவிலும் குஷ்புவின் திருமணம் குறித்தும், மதம் மாற்றம் குறித்தும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'நான் திருமணத்திற்காக மதம் மாறிவிட்டதாக கூறுபவர்கள் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் நிச்சயமாக கேள்வி பட்டிருக்கமாட்டார்கள். திருமணத்திற்காக நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை. மதம் மாற சொல்லி யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. என் 23 வருட திருமண வாழ்க்கை மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.