பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் |
பொதுவாகவே ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்களிடம் பத்திரிகையாளர்கள் அடிக்கடி கேட்பது, அந்த படங்களில் இரண்டாம் பாகம் உருவாகுமா, எப்போது உருவாகும் என்பது போன்ற கேள்விகளைத்தான். ஒரு படம் ஹிட்டாகி விட்டாலே இரண்டாம் பாகம் எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு இதனாலேயே பல இயக்குனர்கள் தள்ளப்படுகின்றனர். அதேசமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இப்படி ஒரு கேள்வியை யாரும் தன்னிடம் கேட்காமலேயே தனது படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என்கிற ஒரு தகவலை பட ரிலீஸுக்கு முன்பே கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.
தற்போது தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. வரும் மே 12ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெங்கட் பிரபு பேசும்போது தெலுங்கில் சரளமாக பேசுவதற்கு தடுமாறினார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசி சமாளித்தார்.
அப்போது தானாகவே அங்கு இருந்த பார்வையாளர்களை பார்த்து, “நிச்சயமாக அடுத்ததாக நாகசைதன்யாவை வைத்து இயக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது முழுவதுமே தெலுங்கில் பேசுகிறேன்.. ஒருவேளை அது கஸ்டடி படத்தின் இரண்டாம் பாகத்தின் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக கூட இருக்கலாம்” என்று போகிற போக்கில் ஒரு தகவலை கூறினார்.
இது அப்போதைக்கு சமாளிப்பதற்காக கூறப்பட்ட விஷயமா, அல்லது உண்மையாகவே இதற்கு இரண்டாம் பாகம் இருக்கும் ஐடியா அவரிடம் இருக்கிறதா என்பது படத்தின் வெற்றியை பொறுத்து தான் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.