லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தர்ஷன். நடிகையும் தனது காதலியுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளி வருவதற்கான தீவிர முயற்சிகளிலு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் தர்ஷன். அந்த வகையில் நேற்று (ஆக-1) தர்ஷன் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி உள்ள பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கலைத்து விட வாய்ப்பு இருக்கிறது என கூறி சிறப்பு புலனாய்வு குழுவினர் அளித்த மனுவின் பெயரில் நடைபெற்ற இந்த விசாரணையை தொடர்ந்து தர்ஷன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மெத்தை வழங்க அனுமதிக்க வேண்டுமென தர்ஷன் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.