லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் படம் புட்டேஜ். அஞ்சாம் பாதிரா, கும்பலாங்கி நைட், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஷைஜூ ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். மஞ்சு வாரியர் தவிர விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 2 (நாளை) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பால் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் இரண்டில் வெளியாகாது என்று அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், புதிய ரிலீஸ் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த படம் மட்டுமல்ல மலையாளத்தில் இந்த வாரம் வெளியாவதாக இருந்த படங்களும் தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றே தெரிகிறது.