ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. இப்படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் அமைந்ததாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக 2002 குஜராத் கலவரம், ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவர் பெயர் ஆகியவை குறித்து பல்வேறு எதிர்ப்புக் கருத்துக்களை எழுந்தன.
இதையடுத்து படத்தின் நாயகன் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, அந்த சர்ச்சையான காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம் என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
தற்போது படத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் இடம் பெற்றிருந்த 2 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளார். படத்தில் வில்லனது பெயரையும் மாற்றி மீண்டும் தணிக்கை செய்துள்ளனர். மறு தணிக்கை செய்யப்பட்டது இன்று முதல் தியேட்டர்களில்