பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? |
கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் பாராட்டை பெற்ற படம் தேன். கணேஷ் விநாயகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்திலர் தருண் குமார் மற்றும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்னதி அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன் நடித்திருந்தார்கள்.
தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முதலில் தியேட்டரில் வெளியான இந்தப் படம் அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்போது முதன் முறையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. நாளை (ஞாயிறு) மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.