ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அசத்தலான என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. இனி நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் அனைவரும் சிம்புவிற்கு ஆரவாரமாக வரவேற்பை கொடுத்தனர். அதில் பாலாஜி முருகதாஸ் 'தலைவா' என்று கத்தியபடி டான்ஸ் ஆடினார். அபிராமி, தாமரை, ஜூலி, அனிதா சம்பத் என அனைவரும் ஷாக்கான ரியாக்ஷன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை சிம்புவிற்கு தனித்தனியாக அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது பாலாஜி முருகதாஸ் 'வல்லவன் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து குரூப் டான்ஸ் ஆடிய குழந்தைகளில் நானும் ஒருவன்' என்று கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியான சிம்பு 'ஏங்க இப்படி எல்லாம் சொன்னா எனக்கு ரொம்ப வயசானா மாதிரி இருக்குங்க' என வெட்கப்பட்டார். இருவருக்குமிடையே நடைபெற்ற இந்த சுவாரசியமான உரையாடல் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.