புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரச்சிதா மஹாலெட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கணவர் இறந்து விட்ட நிலையில், ஒற்றை பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க பாடுபடும் ஒரு தாயின் போராட்டமாக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வந்தனர். தற்போது இதில் பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் முன்னதாக 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர். இருந்தாலும் அமுல் பேபி என்ற பட்டப்பெயருடன் அவர் அதிகமாக பிரபலமானது ஜீ தமிழின் சத்யா சீரியலில் தான். தற்போது சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் விஷ்ணு தான் ஹீரோ. ஆனால் அந்த முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் விஷ்ணு சத்யா 2 சீரியலை கைவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சொல்ல மறந்த கதை வருகிற மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.