ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் குயின். 12 சின்னத்திரை நடிகைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல வகையிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சூப்பர் குயின் பட்டத்தை பெற போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வார எபிசோடுக்கான புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகைகள் அனைவரும் ஆளுக்கொரு கான்செப்டை மையமாக வைத்து அரங்கம் அதிர நடனமாடியுள்ளனர். அதிலும் ரத்த காயங்களுடன் இருக்கும் 'சத்யா' நடிகை ஆயிஷா, சிலம்பம் சுற்றும் வைஷ்ணவி, காளி வேடம் போட்டிருக்கும் ஆஷா கெளடா, பரதநாட்டியம் ஆடும் வித்யா ஆகியோரின் காட்சிகள் இந்த வாரத்திற்கான எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சூப்பர் குயின் நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.