ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்க இருவர்' தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆர்ஜே செந்தில், மோனிஷா, வெங்கட், காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடர், தற்போது சூப்பரான திரைக்கதை வடிவமைப்பால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையை மேலும் சுவாரசியமாக்கும் பொருட்டு சில கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது ஹீரோயினாக வீஜே பவித்ரா நடித்து வருகிறார்.
இவர் நிலா மற்றும் வைதேகி காத்திருந்தாள் ஆகிய தொடர்களில் நடித்தவர் ஆவார். மேலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவரது என்ட்ரியால் சீரியல் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு அடைந்துள்ளனர்.