பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

விஜய் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான சூப்பர் டாடி நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான விளையாட்டு போட்டிகளுடன் கலகலப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் வெங்கட், ராமர், மதுரை முத்து, வேல்முருகன் உட்பட பலரும் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூ இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளனர்.
வெங்கட் மற்றும் அவரது மகள் தேஜூ இந்த நிகழ்ச்சியில் மிகவும் க்யூட்டாக விளையாடி ரசிகர்களை ஈர்த்து வந்தனர். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக சூப்பர் டாடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்கட் - தேஜூ பாப்பாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் வைல்ட் கார்டு என ஏதாவதொரு வகையில் மீண்டும் வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.




