'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவிற்கும் திருமணமாகி ஏற்கனவே அய்லா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆல்யா பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தையாக இருந்தால் லைலா, ஆண் குழந்தையாக இருந்தார் அர்ஸ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆல்யா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். முன்னதாக பிரசவம் காரணமாக ஆல்யா சீரியலை விட்டு விலகுவாரா? என்ற ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா, சீரியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என பதிலளித்திருந்தார். ஆல்யாவின் ரசிகர்கள் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.




