பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் தாமரைச்செல்வி தான் ஒரே ஆறுதலாக இருந்தார். ஆனால், அவரும் சமீபத்திய எவிக்ஷனில் வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை தாமரைச் செல்வி யார்? என்ன செய்கிறார்? என்று எதுவுமே தெரியாது. இருப்பினும் அவருக்கு சப்போர்ட்டர்ஸ் அதிகம். தற்போது வெளியாகியுள்ள தாமரைச் செல்வியின் வீடு பற்றிய தகவல்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர் தாமரை. தற்போது அவரது குடும்பம் அண்ணன் பெரமையா சம்பாத்தியத்தில் ஓடி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தாங்காத வீடு, வீட்டில் ஆறு பேருக்கு மேல் தங்க வசதி கிடையாது. வீட்டிற்கு அருகே மாட்டுக்கொட்டடியின் அருகில் தான் சமையல் கட்டு. வீட்டில் டிவி கூட கிடையாது. தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிறகு தான் டிவியை சரி செய்துள்ளனர். அதில் தாமரைச் செல்வி சிரிப்பதை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவரது தங்கை விஜயலெட்சுமி கூறுகையில், 'நான் பிறந்ததில் இருந்து அக்கா முகத்துல சந்தோஷத்த பார்த்ததே இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அக்கா சிரித்ததை பார்த்தேன்' என கூறியுள்ளார்.
அடிப்படை தேவையான பாத்ரூம் வசதி கூட இல்லாத வீட்டில் தான் தாமரைச் செல்வி பிறந்துள்ளார். இன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ள அவர், தனது வீட்டை எப்படியும் முன்னேற்றிவிட முடியும் என நம்பிக்கையுடன் உழைத்து வருகிறார். தாமரைச் செல்வியின் தங்கை விஜயலெட்சுமிக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசையாம். குடும்ப வருமை காரணமாக துணிக்கடைக்கு வேலைக்கு செல்ல நினைத்தவரை அண்ணன் பெரமையா படிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். அக்கா தாமரை செல்வியும் தனது தங்கை கலெக்டர் ஆக வேண்டும் என போராடி வருகிறார்.