ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், முத்துராமன் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. 50 எபிசோடுகளை மட்டுமே கடந்த இந்த தொடர் கடந்த அக்டோபர் மாதம் தான் ஒளிபரப்ப ஆரம்பமானது. தனது குடும்பத்திற்காக சிங்க பெண்ணாக நிற்கும் கயல் என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், ரிலீஸான நாள் முதல் இப்போது வரை டிஆர்பியிலும் நல்ல இடத்தை பெற்று வருகிறது.
'கயல்' தொடரின் ஆரம்பமே அபார வெற்றி அடைந்துள்ளதையடுத்து, தற்போது இந்த தொடர் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கில் 'கயல்' தொடர் 'சாதனா' என்ற பெயரில் உருவாகவுள்ளது. இதில் லக்ஷ்மி ஸ்டோர்ஸில் நடித்த ஹுசைன் அஹ்மது கான் ஹீரோவாகவும், கண்மணி தொடரில் நடித்த சம்பாவி குருமூர்த்தி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.