மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ரச்சிதா சினிமாவில் என்ட்ரி கொடுத்ததையடுத்து சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
விஜய் டிவி சீரியல்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான முகமாக இருந்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசன்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா, தற்போது 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2-விலும் கலக்கி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கன்னட படத்தின் மூலம் கிடைத்தது. இதனையடுத்து அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன் பரவலாக வலம் வந்தன. ஆனால், அப்போது அதை மறுத்த ரச்சிதா, 'போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆன பாத்துக்கலாம். சீரியலை விட்டு போறேன் போறேன்னு சொல்லி சொல்லி நீங்களே போக வைச்சுடாதீங்க' என கிண்டலாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் டிவிக்கு பை சொல்லிவிட்டு சினிமாவிற்குள் மொத்தமாக நுழைகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரச்சிதா 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வின் மஹாலெட்சுமி கெட்டப்பில் போட்டோவை வெளியிட்டு கேப்ஷனாக 'பை மஹா' என பதிவிட்டுள்ளார். ரச்சிதா சின்னத்திரையை விட்டு முழுதாக விலகியுள்ள செய்தி சில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.