ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சூப்பர் சிங்கர் பிரபலமான மாளவிகா சுந்தர், தன்னுடைய காதலர் தன்னை விட வயதில் சிறியவர் என்பதை வெளிப்படையாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8-வது சீசனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் பாடகி மாளவிகா சுந்தரும் ஒருவர். இவர் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியான சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும், அதேபோல் ஹிந்தியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழடைந்தார்.
சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மாளவிகா அவ்வப்போது லைவ்வில் வந்து ரசிகர்களுடன் உரையாடுவார். மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணமாகவுள்ள நிலையில் சமீபத்தில் லைவ்வில் வந்த அவரிடம் அவரது காதலர் குறித்தும் திருமணம் குறித்தும் பல ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர்.
அதற்கெல்லாம் பதிலளித்துள்ள மாளவிகா, 'என்னை விட எனது காதலர் ஒரு வயது சிறியவர். எனக்கு 33 அவருக்கு 32' என்று கூறினார். மேலும் 'பெண்ணை விட பையன் வயது அதிகமான இருக்க வேண்டும் என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்' என விளக்கமளித்துள்ளார். தற்போது மாளவிகா சுந்தர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




