பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் |
காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, விரைவில் தனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்ட சமந்தா, தற்போது சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.