பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தமிழ் சினிமாவில் தன்னுள் பல திறமைகளை அடக்கியுள்ள ஒரு நடிகர் சிலம்பரசன். இயக்கம், நடிப்பு, இசை, பாடல் எழுதுவது, பாடுவது உள்ளிட்ட பல திறமைகள் அவரிடம் உண்டு. அவரது திறமைக்கேற்ற உயரத்தை அவர் இன்னும் அடையவில்லை என்பதுதான் உண்மை. சிம்பு நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்கள் படைக்காத ஒரு சாதனையை அவர் நடித்து தீபாவளிக்கு வர உள்ள 'மாநாடு' டிரைலர் படைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி 'மாநாடு' பட டிரைலர் யு டியுபில் வெளியானது. நான்கு நாட்களுக்குள்ளாக அந்த டிரைலர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சிம்பு நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் டிரைலருக்குத்தான் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தது. ஆனால், அந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி என மூன்று ஹீரோக்கள்.
யூ டியுப் அதிக பிரபலமான கடந்த சில வருடங்களில், சிம்பு தனி நாயகனாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய 'அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களின் டிரைலர்கள் கூட 1 கோடி பார்வையைக் கடந்ததில்லை. 'மாநாடு' டிரைலருக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக படக்குழுவினருக்கும் மகிழ்ச்சிதான்.
தீபாவளியை முன்னிட்டு 'மாநாடு' படம் வெளியாக உள்ளது.