லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், சிங்கிள் பாடல், டீசர் என உற்சாகத்தில் உறைய வைத்தனர் படக்குழுவினர்.
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் ஹூமா குரேஷி பைக் ஸ்டண்ட் காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் அளித்துள்ள பேட்டியில் கொரோனா லாக் டவுனால் கதையில் நிறைய மாற்றினோம். எனவே அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் காதல் காட்சிகள் கிடையாது. படத்தில் இருவரும் நண்பர்கள். அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.