என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இந்தியத் திரைப்படங்கள் அவ்வப்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள் சிலவற்றை அங்குள்ள ஜப்பான் சினிமா ரசிகர்களும் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் 'மாநாடு'.
'டைம் லூப்' சிக்கலில் மாட்டிக் கொண்ட கதாநாயகன் பற்றிய கதையில் மிகவும் பரபரப்பான திரைக்கதை கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது.
இப்படத்தை மே 2ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியிடுகிறார்கள். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.