7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் |

நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதனை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு விடப்பட்டுள்ளதால் சிம்பு டிரெண்டிங் படிப்பான ஏ.ஐ., தொழில்நுட்ப படிப்பை மேற்கொண்டு வருகிறாராம். இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ளார் என்கிறார்கள். இதற்கிடையில் அவருக்கு கதை வைத்து காத்திருக்கும் இயக்குனர்களிடம் வீடியோ காலின் மூலம் கதை கேட்டு வருகிறார் என்கிற இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு தரப்பில் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் ஏஐ.,யின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக நடிகர் கமல் ஏற்கனவே அமெரிக்காவில் சிலகாலம் தங்கியிருந்து இதுதொடர்பான படிப்பை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




