செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் சென்சார் நடந்து முடிந்து நேற்றுதான் அதற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் 'யுஎ 16+' சான்றிதழ் இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தை நெருங்காமல் 2 மணி நேரம் 20 நிமிடம் மட்டுமே இருப்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரமாக இருப்பது சலிப்பைத்தான் ஏற்படுத்தியது. 'விடாமுயற்சி' படம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் இருந்தது. அந்தப் படத்தை விட கால் மணி நேரம் குறைவாகவே 'குட் பேட் அக்லி' இருக்கிறது.
ஆனால், அதையெல்லாம் விட தணிக்கை சான்றிதழில் ஒரு அதிர்ச்சி இடம் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அஜித் படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளதா என்பதுதான் அது. அதிகமாகப் பயன்படுத்தப்படும் சில கெட்ட வார்த்தைகள் அவை. அந்த 'அக்லி' வார்த்தைகள் அனைத்தும் 'மியூட்' செய்யப்பட்டுள்ளது.