24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் |
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குடும்ப பின்னணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‛அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை மாலை 6மணிக்கு வெளியிட்டனர். ரஜினிக்காக பல ஓபனிங் பாடலை பாடி உள்ளார் எஸ்.பி.பி. அனேகமாக இந்த பாடலும் ஓபனிங் பாடலாக தான் இருக்கும் என தெரிகிறது. நம்பிக்கைக்கான வரிகளுடன் அண்ணாத்த ரஜினியின் புகழ்பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல் வெளியானதும் நடிகர் ரஜினி டுவிட்டரில், ‛‛45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி, அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.