திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மிஸ்.பெங்களூர் 2021 டைட்டில் வென்றிருக்கிறார் தமிழ் பெண்ணான முத்தழகி. தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: நான் பிறந்து, வளர்ந்தது கேரள மாநிலம் திருச்சூர். அம்மா மலையாளி, அப்பா தமிழ்நாடு. என்ஜினீயரிங் முடித்து விட்டு பெங்களூரில் வேலை பார்த்து வந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட வருட கனவு. அதற்காக மாடலிங் துறையில் நுழைந்தேன்.
மாடலிங் செய்து கொண்டே வாய்ப்பு தேடினேன். புதுமுகம் என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் மிஸ்.பெங்களூரு டைட்டில் வென்றதன் மூலம் ஒரு அடையாளம் கிடைத்தது. வாய்ப்பும் வருகிறது. தமிழில் சீனு ராமசாமி இயக்கும் இடிமுழுக்கம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் இரு பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. தெலுங்கு, மலையாளத்திலும் வாய்ப்புகள் வருகிறது.
சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து மாடலிங் துறையிலும் இருப்பேன். மஞ்சு வாரியர், பார்வதி மேனன், மீரா ஜாஸ்மின், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் எனது ரோல் மாடல்கள். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிப்பேன். என்கிறார்.