100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா, ‛‛உள்ளாட்சித் தேர்தல், பிக்பாஸ், விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன், வெற்றிமாறன் உடன் புதிய படத்திற்காக இணைய இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் ஒரு நாவலை கமலிடம் சொன்னதாகவும் அவருக்கு அந்த நாவல் பிடித்து விட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.