மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு |
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த விடுதலை-2 படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்குவதற்கு முன்பு நடந்த பூஜை குறித்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்ததும் விடுதலை-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படஉள்ளது. அதோடு விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்ற நிலையில், இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மஞ்சு வாரியர், எஸ்.ஜே.சூர்யா, அட்டகத்தி தினேஷ் போன்ற பிரபலங்களும் இந்த பாகத்தில் இணைந்துள்ளார்கள்.