'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை |
ரத்தினசிவா இயக்கத்தில், தமன் இசையமைப்பில், அருண் விஜய், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வா டீல்'. 2014ம் ஆண்டே இப்படம் வெளிவர வேண்டிய படம். ஆனால், பட வெளியீடு தள்ளிப் போனது. அருண் விஜய் வில்லனாக நடிக்க அஜித் நாயகனாக நடித்து 2015ல் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு படத்தை வெளியிட முயற்சி செய்தார்கள். அப்போதும் படம் வெளியாகவில்லை. பல முறை அறிவிக்கப்பட்டு வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
இந்த வருட தீபாவளிக்கு 'வா டீல்' படத்தை வெளியிடப் போவதாக அப்படத்தை வழங்கும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அறிவித்துள்ளார். நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் படங்களுடன் 'வா டீல்' படமும் போட்டியில் குதிக்கிறது.
அருண் விஜய் தற்போது, “பார்டர், அக்னி சிறகுகள், சினம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'யானை' படத்தில் நடித்து வருகிறார். அவர் தன் மகன், அப்பா ஆகியோருடன் நடித்துள்ள 'ஓ மை டாக்' படம் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.