12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
சிரிப்பு நடிகர் மட்டுமின்றி சிந்திக்க வைக்கக்கூடிய நடிகராகவும் இருந்தவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மீது அதிக பற்று கொண்டவரான விவேக், அவரது மறைவிற்கு பிறகு கிரீன் கலாம் என்ற திடத்தை தொடங்கி ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணமடைந்தார்.
மேலும், விவேக் காமெடியனாக நடித்து கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான சைமா விருது விழாவில் சிறந்த காமெடியனுக்கான விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை அவர் சார்பில் நடிகர் யோகிபாபு பெற்றுக் கொண்டார். அதோடு விவேக்கின் வீட்டிற்கு சென்று அந்த விருதினை அவர் வழங்கியிருக்கிறார்.
இந்ததகவலை விவேக்கின் மகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தைக்கான விருதினை பெற்றதற்காக தாராளபிரபு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த விருதினை தனது வீடு தேடி வந்து கொடுத்த யோகிபாபுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.