'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? |
மதுரையே சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டுபரமக்குடியில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் திருவேட்டரை அய்யனார்தான் வடிவேலுவின் குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் வடிவேலு இங்கு குடும்பத்துடன் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் உள்ளது. சுமார் 5 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் அது. இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வடிவேலு சந்தித்த பிறகே இந்த மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.