இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தலைவி படத்தில் பணியாற்றிய பாலிவுட் எழுத்தாளர் ரஜத் அரோரா என்பவர் ஒரு பேட்டியில், தலைவி-2 உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, முதல் பாகத்தில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு படம் முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்தில் அரசியலில் அவர் சந்தித்த வெற்றி தோல்வி, போராட்டங்களை சொல்லப் போகிறோம். அதனால் தலைவி-2 படம் குறித்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் ஓகே சொல்லிவிட்டால் இரண்டாம் பாகத்திற்கான கதைப்பணிகளை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.