புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தினால் ஏற்பட்ட பஞ்சாயத்தினால் சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, இப்போதுதான் சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய்சேகர் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. இப்போது அந்த கேரக்டரையே ஒரு முழு நீள படமாக எடுக்க உள்ளனர். அதனால் இந்த படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்க எண்ணினர். ஆனால் இதே தலைப்பில் நடிகர் சதீஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் நாய் சேகர் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. இதையடுத்து வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்று தலைப்பு வைக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நாய்சேகர் தலைப்பு குறித்து ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறுகையில், நாய் சேகர் என்பது வடிவேலு சாருக்குரிய தலைப்பு தான். என்றாலும் அந்த தலைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கதையில் சதீஷ் நடித்து முடித்து விட்டார். அந்த கதைக்கு அந்த தலைப்பு சரியாக இருக்கும் என்பதால் அவர்கள் தங்களது பிரச்சினையை சொல்லிவிட்டார்கள். நான் கூட இது சம்பந்தமாக சதீஷிடம் பேசினேன்.
மேலும், சதீஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடிக் கும் படம் என்பதால் அவருக்கு இதுபோன்று ஏற்கனவே ரீச்சான தலைப்பு தேவைப்படுகிறது. ஆனால் வடிவேலு சாரைப் பொறுத்தவரை அவர் எந்த தலைப்பில் நடித்தாலும் ரீச்சாகி விடும். அப்படியொரு பிரமாதமான நடிகர். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும். என்னைப் போன்ற நடிகர்களின் படங்களிலும் காமெடி செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.