ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இந்திய டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. ஹிந்தியில் இந்த வருடம் 15வது சீசன் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது.
அதற்காக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சல்மான்கானுக்கு ஒரு வாரத்திற்கான சம்பளம் 25 கோடி வரை எனத் தகவல் வெளியாகியது. அதாவது வார இறுதி நாட்களில் அவர் வரும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும். அதையும் ஒரே நாளில் படமாக்கிவிடுவார்கள். அதனால், ஒரு நாள் சம்பளமாக 25 கோடி என்றும் சொல்லலாம்.
அதே சமயம், தெலுங்கில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனாவின் சம்பளம் மொத்தமாகவே சல்மானின் சம்பளத்தில் பாதிதானாம். அதாவது, 100 நாட்கள் சுமாராக 13 வார இறுதி நாட்களில் நகார்ஜுனா வரும் வார இறுதி நிகழ்ச்சிகளுக்காக அவருடைய மொத்த சம்பளமே 12 கோடிதானாம். கூடுதலாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது வார இறுதி நாட்களுக்காக 25 லட்சம் தருவார்களாம்.
மொத்தமாக நிகழ்ச்சிக்கான சம்பளமாக 12 கோடி, பிளஸ் 25 லட்சம் என 13 வாரங்களுக்கு 3 கோடியே 25 லட்சம். ஆக மொத்தமாக 15 கோடியே 25 லட்சம் மட்டுமே. இது சல்மான் கான் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட 10 கோடி குறைவு.
தமிழில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ஒரு வாரத்திற்கு சுமார் 3 கோடி சம்பளம் இருக்கலாம் என்கிறார்கள். மொத்தமாக 75 கோடி வாங்கலாம் என்று தகவல்.




