ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு 'நாய் சேகர்' என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது.
இந்நிலையில் சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் போஸ்டரை இன்று(செப்., 16) மாலை முந்தி வெளியிட்டனர். படத்திற்கு நாய் சேகர் என தலைப்பிட்டு, ஒரு நாய் உடன் சதீஷ் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
சிவகார்த்திகேயன் இந்த போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு, ‛‛வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் நாய் சேகர் படத்தின் தலைப்பு சதீஷிற்கு கிடைத்துள்ளது. இதனால் வடிவேலு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அநேகமாக நாய் சேகர் என்ற பெயருடன் ‛‛மீண்டும் நாய் சேகர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்'' போன்ற வார்த்தைகள் இணைப்பட்டு வடிவேலு படத்தின் தலைப்பு வெளியாகலாம் என தெரிகிறது.