ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. என்றாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்டது. தற்போதுதான் தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தியேட்டர்களும் மூடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தியேட்டர்கள் ஞாயிற்றுக் கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு அதிகமான வசூலாகும் நாள் ஞாயிற்றுக் கிழமைதான், அந்த நாளில் தியேட்டர் மூடப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த தடை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.