நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் |
பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் தலைவி படத்தை அடுத்து சீதா படத்தில் சீதாவாக நடிக்க உள்ளார். அலாகிக் தேசாய் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். உடன் படத்தின் இயக்குனர் அலாகிக்கும் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் முதலில் சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பானது. இப்போது கங்கனா நடிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மணிகர்ணிகா, தலைவி படங்களுக்குப் பிறகு ஒரு பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கங்கனா. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.