பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சில்வர் லைனிங் ப்ளேபுக் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ஜெனிபர் லாரன்ஸ். தி பர்னிங் பிளைன், எக்ஸ் மேன்: பர்ஸ்ட் கிளாஸ், தி ஹங்கர் கேம்ஸ், அமெரிக்கன் ஹஸ்ட்ல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தார். தற்போது டோண்ட் லாக்அப், ரெய் வொய்ட் அண்ட் வாட்டர் படங்களில் நடித்து வருகிறார்.
31 வயதாகும் ஜெனிபர் ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ், இயக்குனர் டேரன் அனோப்ஸ்காப் ஆகியோரை வெவ்வேறு காலகட்டங்களில் காதலித்தார். இந்த காதல்கள் தோல்வியில் முடிந்தது. கடைசியாக ஆர்ட் கேலரி இயக்குனர் குக் மரோனி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதனை தற்போது ஜெனிபர் உறுதிப்படுத்தி உள்ளார்.